[மிக்க நன்றி குமுதத்திற்கு....]
மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்)உணவு மற்றும் பண்டங்களை அதிகம் உட்கொள்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.
மாவுச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்கிறவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறு உள்ளதா என்று மேற்கொண்ட ஆய்வு விவரம் வருமாறு:
மாவுச் சத்து உணவுகள் உட்கொள்ளும் 15 ஆயிரம் ஆண்கள் மற்றும் 32 ஆயிரம் பெண்களைத் தேர்ந்தெடுத்து சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்து அவர்கள் கவனிக்கப்பட்டு வந்தனர். இதில் 158 பெண்களும், 305 ஆண்களும் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.மற்ற சத்து உணவுகளை உட்கொள்பவர்களைவிட, மாவுச் சத்து உணவுகளை உட்கொள்கிறவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரியவந்தது.
மாவுச்சத்து உணவே அபாயமல்ல.அந்த உணவும் ரத்தத்தில் கலப்பதற்காக குளுக்கோஸை விடுவிக்கும் வேகம்தான் பெரிய அபாயம். அதிவேகத்தில் குளுக்கோஸை விடுவிக்கும் மாவுப் பொருள்கள் ஹைகிளைகேமிக் குறியீட்டெண் உடையவை என்று அறிவியல் நிபுணர்கள் வரையறை செய்துள்ளனர்.இவை தான் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதனால் 25 சதவீதம் பெண்கள் இதய நோய்க்கு ஆளாகின்றனர்.
மற்ற எளிய உணவுகள், பழங்கள், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொள்ளும் பெண்கள் பாதிக்கப்படுவதில்லை.மாவுச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
===================================================================================
"பாரதீயன் - சந்தோஷம்"
No comments:
Post a Comment